சென்னை: தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சித்திக், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையின் ஆணையர் ஜெயா, மக்கள் நல்வாழ்வு துறையின் கூடுதல் செயலாளர் செந்தில்குமார், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, ஹித்திஷ் குமார் மக்குவானா, பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைப்போன்று 2002 பிரிவை சேர்ந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வைத்தியன், மனிதவள மேலாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி, முதலமைச்சரின் தனி செயலாளர் சண்முகம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், சமூக நலத்துறை செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் ஆகியோருக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சித்திக்
- மெட்ரோ ரெயில் கம்பனி
- ஆணையாளர்
- புள்ளிவிவரங்கள்
- ஜெயா
- பொது நல திணைக்களம்
- செந்தில்குமார்
- டிட்ட்கோ
- சாந்தியா வேனுகோபால்
- சருங் ஹிதிஷ் குமார்
