சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை:
வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தொடர் பிரசார சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகள், 29ம் தேதி திங்கள்கிழமை, திருப்போரூர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகள், 30ம் தேதி கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் முறையில் செய்திட வேண்டும். கட்சியினர், பொதுமக்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
