புதுச்சேரி திமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஆர்.சிவா எம்.எல்.ஏ., மற்றும் புதுச்சேரி-காரைக்கால் மாநில தி.மு.க. அமைப்பாளர் ஏஎம்எச். நாஜிம் எம்.எல்.ஏ. மற்றும் புதுச்சேரி மாநில துணை அமைப்பாளர் வி.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா.செந்தில்குமார் எம்.எல்.ஏ. புதுச்சேரி மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல்.சம்பத் எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.நாக தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து, எதிர்வரும் 2026-ல் நடைபெற உள்ள புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: