சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது: விவசாய பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். இன்னல்களையும், இயற்கை சோதனைகளையும் தாண்டி, அர்ப்பணிப்பு கொண்டு உழைக்கும் அவர்களின் தியாகம் அளவிட முடியாதது. நம் விவசாயிகளின் நலன், பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றை உறுதி செய்வதே நம் தேசத்தின் முன்னேற்றத்திற்காண அடிப்படை. உழவர் வாழ்வு உயர, தேசம் உயர உறுதியை இன்று மீண்டும் எடுத்துக்கொள்வோம்.
