முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுக, அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அமமுக, அதிமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சமூக சேவகர் சங்கர் தருமன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மண்டலப் பொறுப்பாளர் அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நேற்று தேனி வடக்கு மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவரும் அ.ம.மு.க.வை சேர்ந்த தேனி ஒன்றிய முன்னாள் செயலாளருமான வி.பி.ஏ.மிதுன் சக்ரவர்த்தி தலைமையில், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் பி.பாண்டீஸ்வரன், 10வது வார்டு கவுன்சிலர் எம்.சந்திரா, 8வது வார்டு கவுன்சிலர் பி.சுகன்யா மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூர் இணைச் செயலாளர் செல்வராஜ், அம்மா பேரவை செயலாளர் கலையரசன், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த 1வது வார்டு செயலாளர் விஜய்கணேஷ், 11வது வார்டு செயலாளர் மாயகிருஷ்ணன், 15வது வார்டு செயலாளர் மாதவன் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், எம்.பி., பழனிசெட்டிபட்டி பேரூர் செயலாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: