கருங்கல் அருகே பெந்தெகொஸ்தே சபை மீது கல்வீச்சு

கருங்கல், டிச.24: கருங்கல் அருகே இடையன்கோட்டையில் பாலூரை சேர்ந்த ஒருவர் பெந்தெகொஸ்தே சபை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த சபை முன்பு, சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் கல் வீசி ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் ரகளையில் ஈடுபட்டது குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பெந்தெ கொஸ்தே சபை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது எனவும், அது தொடர்பான பிரச்னையில் கல் வீசியதாகவும் கூறினார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: