ராமேஸ்வரம்,டிச.24: பாம்பன் மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் அய்யன்தோப்பு பகுதியில் இயங்கி வரும் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் வட்டாட்சியர் முரளிதரன் தலைமை வகித்தார். கிறிஸ்துமஸ் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இயேசு பிறப்பின் வரலாறு பற்றி கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஆனி பெர்பெட் சோபி சிறப்புரையாற்றினார். மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஆடல் பாடல் நாடகங்கள் நடைபெற்றன. காட்சிப் படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி செயலர் நன்றியுரை கூறினார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
- புதிய ஆண்டு
- இராமேஸ்வரம்
- கிறிஸ்துமஸ்
- பம்பன் பெண்கள்
- கல்லூரி
- கிறிஸ்துமஸ் புத்தாண்டு
- அம்மர் ஸ்காலஸ்திகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பாம்பன் அயந்தோப்பு
- ராமேஸ்வரம் வடாசியர்
