ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை,டிச.24: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருப்பு துணி கையில் கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியமும், பணிக் கொடையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரவியம் தலைமை வகித்தார். மாவட்ட நிதி காப்பாளர் வாசுகி வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் முத்துராமலிங்கம், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ், மின்வாரிய ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பாராம் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரோஜினி நன்றி கூறினார்

Related Stories: