சிவகங்கையில் கிறிஸ்துமஸ் விழா

சிவகங்கை, டிச.24: சிவகங்கையில் சிவகங்கை மறை மாவட்டம் சார்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமை வகித்தார். சிவகங்கை குருசேகரம் ஆயர் ஜோசப், வடக்கு குருசேகரம் ஆயர் வேதமுத்து, சிவகங்கை ஏஜி சபையின் தலைமை போதகர் போஜியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் சிறப்புரை ஆற்றினார். ரமணவிகாஸ் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் முத்துக்கண்ணன், சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஹாஜா மொய்தீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். அருள்பணி ஆரோக்கியசாமி, தூய அலங்கார அன்னை பேராலயத்தின் அருள்பணி ஜெபமாலை சுரேஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிவகங்கை மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவறத்தார், இறை மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: