தென்காசி மாவட்டத்தில் ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி, டிச.24:தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கை, சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம்தேதி ஒவ்வொரு ஆண்டும் ஔவையார் விருதானது பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. 2026ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஒளவையார் விருது வழங்கப்படவுள்ளதால். தென்காசி மாவட்டத்தில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31122025 ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: