திருப்புத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

திருப்புத்தூர், டிச.24: திருப்புத்தூர் அருகே மாங்குடியில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்புத்தூர் அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மகள் ஜெயப்பிரியா(17). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால், பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். நள்ளிரவில் ஜெயப்பிரியாவை காணவில்லை என்று பார்த்தபோது, வீட்டின் அருகில் உள்ள வீட்டில் ஜெயப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நேற்று கண்டவராயன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் சேக்கப் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: