திருச்செந்தூர் சாத்தான்குளம் ஏரலில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்செந்தூர், டிச. 24: திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஏரல் தாலுகாவில் இன்று(24ம் தேதி) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் ஆர்டிஓ கவுதம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஏரல் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எனது தலைமையில் இன்று (டிச.24) காலை 11 மணியளவில் ஏரல் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் கோட்ட அளவிலான பிற துறை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், திருச்செந்தூர், சாத்தான்குளம் மற்றும் ஏரல் வட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories: