நாகர்கோவில், டிச. 24: தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, தமிழ்நாடு முழுவதும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குமரி அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 20ம்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று (23ம் தேதி) 4 வது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்கும் செவிலியர்கள், கடந்த இரு நாட்களாக இரவிலும் அதே இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். குளிர் காரணமாக பலருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய போராட்டத்துக்கு அதிமுக சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சென்று ஆதரவு தெரிவித்தார். அவரும் செவிலியர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். செவிலியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கூறினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுடன் மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்சயா கண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- குமாரி அரசு மருத்துவக் கல்லூரி
- சட்டமன்ற உறுப்பினர்
- தளவாய்சுந்தரம்
- நாகர்கோவில்
- எம்ஆர்பி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம்
