நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.24: தர்மபுரியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, பதவி உயர்வு வழங்கக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் செயலாளர் முனிராஜ், மாவட்ட இணை செயலாளர் கலா, நிர்வாகி திவாகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அன்பழகன் வாழ்த்தி பேசினர். நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் பதிவுறு எழுத்தர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், கண்காணிப்பாளர், ஆட்சி அலுவலர், கோட்ட கணக்கர் மற்றும் வரைவு பகுதி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்ககோரி கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: