சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

சென்னை: சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட தவெக பொறுப்பாளர் அஜிதா தலைமையில் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். தவெகவில் பொறுப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக அஜிதா குற்றம் சாட்டியுள்ளார். காலை முதல் காத்திருந்தும் விஜய் அழைத்து பேசாததால் தூத்துக்குடி மாவட்ட தவெகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Related Stories: