திருவள்ளூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் வரும் 30ம்தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம்

திருவள்ளூர், டிச.20: திருவள்ளூரில், பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயிலில் வரும் 30ம்தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் பிரசன்னா  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த, உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (19ம்தேதி) மாலை 6 மணியளவில் அனுமன் ஜெயந்தி வெண்ணை காப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, வரும் 30ம் தேதி காலை 5 மணியளவில் வைகுண்ட ஏகாதசி மூலவர் விசேஷ அலங்கார சேவையும், தனுர் மாத திருவாராதானமும், மாலை 5 மணியளவில் சேஷ வாகனம் திருவீதி புறப்பாடும் நடைபெறவுள்ளது.

மேலும், 31ம்தேதி புதன்கிழமை விடியற்காலை 5.30 மணியளவில் துவாதசி சயனதிருக்கோலமும், தனுர் மாத திருவாராதானம், ஜனவரி 1ம் தேதி விடியர் காலை 5 மணியளவில் மூலவர் புஷ்பாங்கி சேவையும், தனுர் மாத திருவாராதானமும், 3ம் தேதி இரவு 7:15 மணியளவில் பவுர்ணமி கருட சேவை உள்புறப்பாடும், 14ம் தேதி மாலை 5 மணியளவில் போகி ஆண்டாள் திருக்கல்யாணமும், பெருமாள் – ஆண்டாள் உள்புறப்படும், 15ம் தேதி காலை 7 மணியளவில் தை 1ம் தேதி மகர சங்கராந்தி மூலவர் புஷ்ப அலங்காரமும் நடைபெற உள்ளது. விழாக்களுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாசம், செயல் அலுவலர் பாலாஜி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வேதநாயகி ரவி மற்றும் விழா குழுவினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: