சாத்தூரில் சாலையோரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

சாத்தூர், டிச.15: சாத்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையோரங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் ரயில் நிலையத்தின் வழியாக தினசரி இரு மார்க்கத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் மும்பை, சென்னை, பெங்களூர், குருவாயூர், திருவனந்தபுரம், தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றன. ரயில்களில் பயணம் செய்ய ரயில் நிலையத்திற்கு பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் சென்றும் வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தூர் இருக்கன்குடி சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் இருபகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் ரயில் நிலையம் செல்லும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: