தேனியிலிருந்து இயக்கப்படும் பழுதான பஸ்களால் அவதி

தேனி, டிச. 15: தேனியிலிருந்து இயக்கப்படும் பழுதான பஸ்களால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனால் பழுதான பஸ்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது/ தேனியிலிருந்து திருச்சி, திருப்பூர், நெல்லை, குமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள கிராமங்களுக்கும் அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் சேதமடைந்து உள்ளன.

ஒருசில பேருந்துகளில் பின்பக்க டயர்கள் மற்றும் சாலை தெரியுமளவிற்கு ஓட்டைகள் உள்ளன. தற்போது கோடைமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில பேருந்துகளின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளதால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் மழையில் நனைந்தபடி பேருந்தில் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி பேருந்துகளை புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: