ரகளையில் ஈடுபட்டவர் கைது

சின்னமனூர், டிச.15: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி எஸ்.ஐ பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடைப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடை அருகில் ஒருவர் அமர்ந்து கையில் மதுபாட்டிலுடன் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த போலீசார் அவரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

ஆனால் அவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் ஓடைப்பட்டி அருகே சுக்காங்கல்பட்டி கள்ளர் பாடசாலை தெருவை சேர்ந்த முத்துக்குமார் (43) எனத் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: