முகிழ்த்தகம் வழியாக திருவெற்றியூருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்: தொண்டி மக்கள் வலியுறுத்தல்

தொண்டி,டிச.15: தொண்டியில் இருந்து முகிழ்த்தகம் வழியாக திருவெற்றியூர் வரையிலும் டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ள முகிழ்த்தகம் ஒரு குக்கிராமமாகும். இங்கிருந்து தொண்டி, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையே நாடுகின்றனர். இதனால் ஏராளமான செலவு ஏற்படுகிறது.

கடந்த வருடங்களில் இப்பகுதியில் மினி பஸ் இயக்கப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. முகிழ்த்தகம் பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்கு திருவெற்றியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர். பள்ளி மேல் படிப்பிற்கும் தொண்டி மற்றும் திருவெற்றியூர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இப்பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் கர்ப்பிணி பெண்கள், மாணவ,மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

அதனால் தொண்டியில் இருந்து முகிழ்த்தகம் வழியாக திருவெற்றியூருக்கு டவுன் பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து முருகேசன் கூறியது, முகிழ்த்தகம் பகுதிக்கு கடந்த காலங்களில் மினி பஸ் இயக்கப்பட்டது. அது நிறுத்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் வழியாக திருவெற்றியூர் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Related Stories: