ராஜாக்கமங்கலம், டிச. 15: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக மாணவர் அணி சார்பில் பாம்பன்விளையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாலை உணவு வழங்கப்பட்டது. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் எடின் பிரேம் டேனியல் தலைமையில் ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் முன்னிலையில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் குழந்தைகளுக்கு மாலை உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், தொமுச கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி முருகேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
