நாகர்கோவில்,டிச.15: வெள்ளிச்சந்தை அருகில் உள்ள அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்பியூட்டர் அப்ளிகேஷன், செயற்கை நுண்ணறிவுத்துறை மாணவிகளுக்கு ஒரு வாரம் பைத்தான் உடன் ஜாங்கோ கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. இன்பென்ட் டெக்னாலஜி, ஜென் லேப் மற்றும் நிம் டெக்னாலஜிஸ் இணைந்து இந்த பயிற்சி முகாமை நடத்தினர்.
கல்லூரி தலைவர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் விஜிமலர் முன்னிலை வகித்தார். கல்லூரி துணைத் தலைவர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநர் தருண் சுரத், கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி விஜிலேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
