சீரமைக்க கோரிக்கை சின்னாக்கவுண்டனூர் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விசி கட்சியினர் மனு

கரூர், ஜன. 19: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சின்னாக்கவுண்டனூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில்தெரிவித்துள்ளதாவது:இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மயான பகுதிக்கு செல்ல சரியான பாதையின்றி இந்த பகுதியினர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்ற னர்.மேலும், தெருக்களில் உடைந்த நிலையில் மின்கம்பங்கள் உள்ளதாலும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எங்கள் பகுதிக்கு தேவையான மின்கம்பங்கள் அமைத்து தருவதோடு, மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>