நங்கவரம் பேரூர் நகர செயலாளர் ஏணி சுந்தரம் படத்திறப்பு விழா

குளித்தலை, ஜன.17: குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூர் திமுக சார்பில் மறைந்த நங்கவரம் பேரூர் நகர செயலாளர் சுந்தரம் உருவ படத்திறப்பு விழா நங்கவரம் பேரூர் நகர தேர்தல் பொறுப்பாளர் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா சார்பில் நச்சலூரில் நடைபெற்றது. விழாவிற்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ தலைமை வகித்து, ஏணி சுந்தரம் உருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், அண்ணாதுரை, மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கரூர் ஆண்டாள் பாலகுரு, பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தியாகராஜன், நங்கவரம் பேரூர் நகர நிர்வாகிகள் ராஜா, கருணாநிதி, சின்ராஜ், தமிழ்ச்சோலை சேகர், கருணாநிதி, சங்கர், புகழேந்தி, அன்பழகன், தொழில் நுட்ப அணி விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories:

>