வேலூர், டிச.9: வேலூர் மாவட்டத்தில் துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்விவரம் வருமாறு: காட்பாடி முன்னாள் மண்டல துணை தாசில்தார் துளசிராமன் நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, அதே அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் ஆர்டிஓ அலுவலக முன்னாள் துணை தாசில்தார் வாசுகி, நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, கலெக்டர் அலுவலக இ பிரிவு கண்காணிப்பாளராகவும், வேலூர் தாலுகா அலுவலக முன்னாள் வரவேற்பு துணை தாசில்தார் சவுந்தரராஜன், நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, அதே அலுவலகத்தில் வரவேற்பு துணை தாசில்தாராகவும், குடியாத்தம் முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, வேலூர் தாலுகா அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் கலெக்டர் அலுவலக எச் பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் முருகன், நீதிபரிபாலன் பயிற்சி முடித்து, அணைக்கட்டு தேர்தல் துணை தாசில்தாரகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளர் ராமலிங்கம் பணியிட மாற்றம் செய்து வேலூர் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக துணை தாசில்தாரகவும், வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் ஜெகதீஷ், வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும், காட்பாடி தேர்தல் துணை தாசில்தார் குமார் வேலூர் கலெக்டர் அலுவலக எப் பிரிவு தலைமை உதவியாளராகவும் நியமனம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
