தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு பொன்னை அருகே

பொன்னை, ஜன.30: காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சி அணைக்கட்டு பகுதியில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி மற்றும் வெள்ள பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, தேசிய பேரிடர் மீட்பு பணி குழு டெப்டி கமாண்டன்ட் பிரவீன் தலைமை தாங்கினார். பேரிடர் மீட்பு பணி குழு இன்ஸ்பெக்டர் சவுஹான் முன்னிலை வகித்தார். இதில், வேலூர் ஆர்டிஓ செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் வடிவேல், காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக தேசிய பேரிடர் மீட்பு பணி குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களை மீட்கும் பணியை தத்ரூபமாக பொன்னை ஆற்றில் படகு மூலம் மீட்டு மருத்துவ உதவி அளிக்கும் பணியை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் ஜூலியன் கிளாரம்மாள்(மேல்பாடி), தயாளன்(பிரம்மபுரம்) பொன்னை சப் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: