இடைப்பாடி, டிச.8: இடைப்பாடி வெள்ளாண்டிவலசை ஓம்சக்தி காளியம்மன், எல்லை முனியப்பன், முல்லைவன நடராஜர் கோயில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலத்துடன் தொடங்கியது. நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட தீர்த்தத்தை எடுத்துச் சென்று கோபுர கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. .
