பழவேற்காடு அரங்கங்குப்பம் அருகே கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு

பொன்னேரி, டிச.8: பொன்னேரி, டிச.8: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பழவேற்காடு அரங்கங்குப்பம் கடற்கரை பகுதி அருகே மர்ம பொருள்கள் மூன்றாவது முறையாக கரை ஒதுங்கியது. இதுகுறித்து, திருப்பாலைவனம் காவல்துறையினருக்கும், வருவாய்த்துறையினற்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய அந்த மர்ம பொருட்களை மீட்டு ஆய்வு செய்தனர்.

இதில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளம் அருகில் இருப்பதால் விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்திய பொருளா அல்லது வேறு ஏதேனும் கப்பல்களில் இருந்து ஒதுங்கிய பொருளா, அல்லது கடல் நில அதிர்வுகளை கண்டறியும் கருவியா என திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். சமீபத்தில் இதே போன்ற மர்ம பொருள், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தப் பொருள் கடல் நில அதிர்வினை கண்டறியும் கருவி எனவும், கப்பல்கள் மூலம் இழுத்து செல்லப்படும் போது அறுந்து கரை ஒதுங்கி இருக்கலாமா எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து, கரை ஒதுங்கிய மர்ம பொருள் செங்கல்பட்டு மங்களாபுரத்தில் உள்ள வெடி பொருட்கள் பாதுகாப்பு மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: