ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு

வேலூர், ஜன.12:வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ராஷ்டிரிய உலமா கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று வேலூர் மக்கான் சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஷரீப்பாஷா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பேர் பங்கேற்று, விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும், வேளாண் சட்டங்களில் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை.

எனவே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>