வேலூர் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி

வேலூர், ஏப்.25: ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ₹1.74 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் விரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 25 வயதுடையை இளம்பெண். அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்ததுள்ளது. மேலும் அதில் இணையதளத்தில் பதிவு செய்து பெரும் லாபம் பெறலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த இளம்பெண் இணையதள லிங்கில் சென்று கணக்கு ஒன்றை தொடங்கினார்.

கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை டாஸ்க்குகளை செய்துள்ளார். அதற்காக பல்வேறு கட்டங்களாக ₹1 லட்சத்து 74 ஆயிரத்து 730 ரூபாய் செலுத்தி உள்ளார். பின்னர் தனது பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லையாம். பணத்தை திருப்பித் தருமாறு அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மேலும் பணம் செலுத்த வேண்டும். அப்போதுதான் டாஸ்க் முடிவடையும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலூர் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி appeared first on Dinakaran.

Related Stories: