பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

கரூர், ஜன. 12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையின் போது, வெல்லத்தின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. எனவே, வெல்லம் தயாரிப்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், நொய்யல் போன்ற பகுதிகளில் ஆண்டுதோறும் வெல்லம் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பிருந்தே, வெல்லம் தயாரிப்பில் ஈடுபடும் இவர்கள், தயாரித்த வெல்லங்களை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து பெரும் வியாபாரிகளும் முக்கிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வெல்லம் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>