போதை பொருள் பயன்பாட்டை குறைக்க விரிவான உத்தி தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

 

ராய்ப்பூர்: சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் 60வது அகில இந்திய போலீஸ் டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘விக்சித் பாரத் நோக்கி நகரும் வளரும் நாட்டின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காவல்துறை நடைமுறைகளை காவல்துறை தலைமை மறுசீரமைக்க வேண்டும். மேம்பட்ட தொழில்முறை, உணர்திறன் மற்றும் பதிலடி கொடுக்கும் தன்மை மூலம் காவல்துறை குறித்த கருத்தை குறிப்பாக இளைஞர்களிடையே மாற்ற வேண்டியது அவசியமாகும்.

நாட்கிரிட் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு தளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்தவும், செயல்படக்கூடிய நுண்ணறிவை உருவாக்குவதற்கு ஏஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும்.புயல் உள்ளிட்ட பேரிடர் மேலாண்மைக்கான வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். உயிர்களை பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை திட்டமிடல், நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் உடனடி நடவடிக்கை அவசியமாகும். போதை பொருள் பயன்பாட்டை குறைக்க அமலாக்கத்துறை, மறுவாழ்வு மற்றும் சமூக அளவிலான தலையீடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான அணுகுமுறை தேவை” என்று தெரிவித்தார்.

Related Stories: