ஏற்காட்டில் உலா வந்த காட்டெருதுகள்

ஏற்காடு, நவ.29: ஏற்காட்டில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஐந்துரோடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தினமும் காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பலரும் ஐந்துரோடு பகுதி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென 10க்கும் மேற்பட்ட காட்டெருதுகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. மேலும், அங்குள்ள காபி தோட்டத்தில் பசுமையான புல்வெளிகளில் நீண்ட நேரம் மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனை விரட்ட முடியாமல் அப்பகுதியினர் தவித்தனர். மேலும் அவ்வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர். எனவே, வனத்துறையினர் சாலையில் உலா வரும் காட்டெருதுகளை விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: