டூவீலரை திருடிய வாலிபர் கைது

சங்ககிரி, நவ.27: சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டியைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (26). இவர் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், டூவீலருக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக ஈரோடு சென்று விட்டு இரவு 9.30 மணிக்கு சன்னியாசிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர், முகேஷ்குமாரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டூவீலரை தள்ளிக் கொண்டு வந்துள்ளார். அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார். அதற்கு அந்த நபர் பைனான்ஸில் வண்டியை எடுத்து வரச் சொன்னதாக கூறியுள்ளார். அவரிடம் பெயர் விலாசம் கேட்டபோது, சங்ககிரி வாணியர் தெருவை சேர்ந்த சிவக்குமார் (28) என்று கூறி விட்டு, முகேஷ்குமாரை கீழே தள்ளி விட்டு வண்டியை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து முகேஷ்குமார், நேற்று சங்ககிரி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவகுமாரை கைது செய்தனர்.

Related Stories: