டிரைவரை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

சேலம், ஜன.30: சேலம் மாசிநாயக்கன்பட்டி ஆசாரிதெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (52). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பரான சரவணனிடம் கடனாக ரூ.400 வாங்கினார். அந்த பணத்தை ஒருவாரத்தில் தருவதாக கூறினார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாசிநாயக்கன் பட்டி மாரியம்மன் கோயில் அருகில் தங்கராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணனின் மகன் தனுஷ்வரன்(19), எனது தந்தையிடம் வாங்கிய பணத்தை ஏன் கொடுக்கவில்லை என கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் அங்கு கிடந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து தங்கராஜின் இடுப்பில் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். படுகாயத்துடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனுஷ்வரனை கைது செய்தனர்.

Related Stories: