எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த 3, 4வது அணி உருவாகிறதா? அதிமுக எம்பி சி.வி.சண்முகம் பகீர் தகவல்

விழுப்புரம்: ‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த 3, 4வது அணி உருவானாலும் எங்களுக்கொன்றுமில்லை’ என்று சி.வி.சண்முகம் எம்பி தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவில் முக்கிய தலைவர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வுக்கு பதிலளித்த அவர், யார்?… முக்கிய தலைவர்… என்று கோபத்துடன் கைநீட்டிய பேசிய சி.வி.சண்முகம், செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியாச்சி என்று இரண்டு முறை ஆவேசத்துடன் கூறினார்.

தொடர்ந்து கூறுகையில், ‘மனோஜ் பாண்டியன் ஓபிஎஸ் குரூப்பில் இருக்கார்ன்னு சொல்லுங்க. உங்கள் சவுகரியத்திற்கெல்லாம் நாங்கள் சொல்ல முடியாது. மனோஜ்பாண்டியன் ஓபிஎஸ் குரூப்பு. அதை முதலில் போடுங்க’ என்று டென்ஷடனுடன் பதிலளித்து விட்டு சென்றார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் முயற்சியில், ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்கவுள்ளது குறித்தும், செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் தகவல்கள் குறித்தும் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி சண்முகம், அதிமுகவை பற்றி மட்டும் கேளுங்கள். வெளியில் இருப்பவர்கள் அவர் அங்கு போகிறார், இங்கு போகிறார், 3வது அணி அமைக்கிறார், 4வது அணி அமைக்கிறார், உருளுகிறார், பெரளுகிறார் என எதுவாக இருந்தால் எங்களுக்கு என்ன?. என்று கூறிவிட்டு சென்றார்.

Related Stories: