சரிந்து விழுந்த மரம் உயிர்தப்பிய சிறுவர்கள்

திருச்செந்தூர், நவ. 26: வீரபாண்டியன்பட்டினத்தில் கடந்த 24ம் தேதி மாலை கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது புனித தோமையார் ஆலயம் அருகில் இருந்த பெரிய வேப்ப மரம், திடீரென வேரோடு சாய்ந்தது. மரக்கிளைகள் பட்டு மின்கம்பம் உடைந்து மின்வயர்கள் அறுந்தது. அப்போது ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த குழந்தைகள், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மரக்கிளைகள் அகற்றப்பட்டு மின் கம்பிகளை சீரமைக்கும் பணி நடந்தது. இப்பணியில் மின்வாரியத்துடன் ஆலய பங்கு பேரவை செயலாளர் பீடஸ் பர்னாந்து, திமுக அயலக அணி மாவட்ட துணை தலைவர் பாஸ்டின் வில்லவராயன், பஞ். முன்னாள் துணை தலைவர் ஜெகதீஸ் வீராயன், மெரி மிசியர், ராஜேஷ் வி.ராயன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Related Stories: