காரைக்கால், நவ.22: காரைக்காலில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு திமுக எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காரைக்கால் மாநில திமுக சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரை காந்தி சாலையில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் திருவுருவ சிலைக்கு மாநில கழக அமைப்பாளர் நாஜிம் எம்எல்ஏ, நாக தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் மாநில கழக நிர்வாகிகளும், தொகுதி நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
