ஆத்துமேட்டில் வஉசி படத்திற்கு மரியாதை

வேடசந்தூர், நவ. 19: வேடசந்தூர் ஆத்துமேட்டில் வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்திற்கு வ.உ.சி மக்கள் இயக்கம் சார்பில் மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ரவிசங்கர், கவிதா முருகன், பண்ணை கார்த்தி, தினேஷ் முத்துகிருஷ்ணன், பூபதி மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், வத்தலக்குண்டு காந்திநகர் வெள்ளாளர் பெருமக்கள் சங்கம் சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 89வது குருபூஜை விழா வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே பஸ் நிலையம் முன்பும் அனுசரிக்கப்பட்டது.

 

 

Related Stories: