கடலாடி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

 

சாயல்குடி, நவ. 18: ராமநாதபுரம் மாவட்டம் ,கடலாடி அடுத்துள்ள ஆப்பனூர் அரியநாதபுரம் கிராமத்தில் வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் 19ம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். கடலாடி – முதுகுளத்தூர் சாலையில் 8 கி.மீ., எல்கை நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்ற இந்த பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டிகளுக்கும், பந்தய வீரர்களுக்கும் ரொக்க பணம், நினைவு பரிசு, குத்துவிளக்கு உள்ளிட்டவை பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related Stories: