பிரேமலதா தாயார் மறைவு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தாயார் மறைவுக்கு எடப்பாடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு:
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா, சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருடிவடி நிழல் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: