இதய ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார் கார்கே: 10 நாட்கள் ஓய்வு

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடந்த புதன்கிழமை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் லேசான மூச்சு திணறல் இருப்பதாகவும், ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதால், அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்தி சிகிச்சை அளித்தனர். வீடு திரும்பிய அவர் பத்து நாட்கள் முழு ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: