ஆவடி, அக்.1: திருநின்றவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி ஆணையர் ஜீவிதா, மேலாளர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கினார். அப்போது 13 அரசு துறைகள் மூலம் 224 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 750 பேர் விண்ணப்ப மனு வழங்கி இருந்தனர். முகாமில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், நகரச் செயலாளர் தி.வை.ரவி, நகர இலக்கிய அணி அமைப்பாளர் பிஎல்ஆர் யோகா, ஆவடி மாநகர செயலாளர் சன்பிரகாஷ், நாகராஜ், சுரேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பயனாளிகளுக்கு சான்றிதழ்: அமைச்சர் நாசர் வழங்கினார்
- ஸ்டாலின் முகாம்
- அமைச்சர்
- நாசர்
- ஆவடி
- ஸ்டாலின் திட்டம்
- முகாம்
- திருநின்னார்
- நகராட்சி ஆணையர்
- ஜீவிதா
- மேலாளர்
- சந்துரு
- சிறுபான்மை நலன்புரி
- வெளிநாட்டு
- நலன்புரி
- ச. நாசர்
