பைக் விபத்தில் மாற்றுத்திறனாளியான பர்னிச்சர் வியாபாரிக்கு ரூ.20.77 லட்சம் இழப்பீடு

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்தவர் திருலாக்குமார்(47). பர்னிச்சர் தொழில் செய்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை தலைமை செயலகம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் இவர் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருலாக்குமார், மாற்றுத்திறனாளியானார். இதனால் தான் மாற்றுத்திறனாளியானதற்கு இழப்பீடு வழங்க கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், திருலாக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி.சுதா முன்பு நடந்தது. விசாரணையில் மனுதாரருக்கு 50 சதவீதம் நிரந்தர இயலாமை ஏற்பட்டதற்கு, விபத்தை ஏற்படுத்திய பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம். எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.20.77 லட்சம் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: