அமெரிக்க பொருட்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவு இங்குள்ள உள்ளூர் விவசாயிகளின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும். அக்டோபரில் நமது பருத்தி விற்பனைக்கு வரும்போது அதை வாங்குபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த முடிவால் தெலங்கானா, பஞ்சாப், வித்ர்பா மற்றும் குஜராத் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்திருப்பது அனைவருக்கும் தெரியும். அதனால் அமெரிக்கா மீதான 11 சதவீத வரியை 50 சதவீதமாக உயர்த்தியிருக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தால், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்க வேண்டும். ஒன்றிய அரசு இந்த முடிவெடுத்தால் முழு நாடும் ஆதரவளிக்கும். எந்தவொரு நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. இந்தியா 140 கோடி மக்களை கொண்ட நாடு” என்றார்.

Related Stories: