உச்ச நீதிமன்ற நீதிபதியாக குஜராத் நீதிபதி பஞ்சோலிக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு: கொலிஜியம் முடிவை எதிர்த்த பெண் நீதிபதி

புதுடெல்லி: மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் நேற்று முன்தினம் பரிந்துரைத்தது. நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலிஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நாகரத்னா ஆகிய 5 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் உச்ச நீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியான நாகரத்னா, நீதிபதி பஞ்சோலியின் பதவி உயர்வு பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளார். இதனால் கொலிஜியம் 4-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் பஞ்சோலியை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பான கொலிஜியம் ஆலோசனையில், பஞ்சோலியை பரிந்துரைப்பது கொலிஜியம் அமைப்பு மீதான நம்பகத்தன்மையை சிதைத்துவிடும் . நீதிபதி பஞ்சோலி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு வழக்கமான முறையில் மாற்றப்படவில்லை. ரகசியமாக பஞ்சோலி பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. எனவே அவரது நியமனம் சரியல்ல என நீதிபதி நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories: