விழுப்புரம், ஆக. 27: விழுப்புரம் லாட்ஜில் விபசாரம் நடத்திய மேலாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அழகிகளை மீட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சில லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு வந்த புகாரின் பேரில் தாலுகா காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி திடல் எதிரே உள்ள பிரபல லாட்ஜில் சோதனையிட்டபோது 2 அழகிகளை வைத்து மேலாளர் கோழிபட்டை சேர்ந்த தட்சணாமூர்த்தி (45) என்பவர் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சோதனையில் அழகிகளுடன் இருந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் லாட்ஜ் மேலாளர் கோழிபட்டை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அழகிகளுடன் இருந்த 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாட்ஜில் இருந்த அழகிகளை மீட்ட போலீசார் காப்பகத்துக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
