அரவக்குறிச்சி வாரச்சந்தை மூடல்

அரவக்குறிச்சி, மார்ச் 20: அரவக்குறிச்சியில் கொரோனா வைரஸ் காரணமாக வியாழன் தோறும் நடைபெறும் வாரச்சந்தை 31ம் தேதி வரை நடைபெறாது என்று பேரூராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று சந்தை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுப் பகுதி பொதுமக்கள் பொருள்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். அரவக்குறிச்சி-பள்ளபட்டி சாலையில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தை மையம் உள்ளது. இங்கு காய்கறிகள், பழவகைகள், மளிகை, பொரி, மிக்சர் உள்ளிட்ட தின்பண்டக் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும். வெளிச் சந்தையை விட இந்த வாரச்சந்தையில் பொருள்கள் விலை மலிவாக கிடைக்கும் என்பதாலும், தேவையான அத்தியாவசிய பொருள்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதாலும் சுற்றுப் பகுதி ஊராட்சிக்குட்பட்ட ஏராளமான கிரமங்களிலிருந்து பொதுமக்கள் வந்து காய்கறி உள்ளிட்ட தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வார்கள். பேரூராட்சி சர்பாக வியாழக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த வாரச் சந்தை அதிக மக்கள் கூடுவதால் கொரானா வைரஸ் காரணமாக 31ம் தேதி வரை சந்தை நடைபெறாது என்று பேரூராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று (வியாழக்கிழமை) நடக்க வேண்டிய வரச் சந்தை மையம் சந்தை நடக்காமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சுற்றுப் பகுதி பொதுமக்கள் பொருள்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். வேறு வழியில்லாமல் வெளிக்கடைகளில் சற்று அதிக விலை கொடுத்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.

Related Stories: