கரூர் எம்பி, அரவக்குறிச்சி எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 386 பேர்

கரூர், மே 23:  கரூர் பாராளுமன்ற தொகுதி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைஇன்று நடைபெறுகிறது. இதில் 386பேர் ஈடுபடுகின்றனர். 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று கரூர் அருகே உள்ள தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லு£ரியில் நடைபெறுகிறது. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரை உள்பட 43வேட்பாளர்களும், அரவக்குறிச்சி எம்எல்ஏ தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உள்பட 63வேட்பாளர்களும் போட்டியிடுவதால் வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு வாக்கு என கணக்கிட்டு மொத்த வேட்பாளர்களது வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து முடிவுஅறிவிக்கப்படும். வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பிற தொகுதியை விட சுற்று எண்ணிக்கை அறிவிக்க கூடுதல் நேரம் பிடிக்கும்.,

இன்று காலை 8மணிக்கு முதலில் தபால் வாக்குகள்எண்ணிக்கை நடைபெறும்.பின்னர் 8.30மணிக்கு பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குசாவடி எண் வாரியாக மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்படும். வாக்குஎண்ணும் அறையில் கரூர் எம்பி தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி என 6தொகுதிக்கும் தலா 14மேஜைகள் போட்டுள்ளன. மேஜை ஒன்றுக்கு தலா3பேர் அதாவது உதவியாளர், மேற்பார்வையாளர், நுண்பார்வையாளர் என3பேர் வாக்குஎண்ணும்பணியில் ஈடுபடுகின்றனர். எம்பி தொகுதிக்கும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் என 386பேர் எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர். ஒரு சுற்று முடிந்ததும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர் அமர்ந்திருக்கும்மேஜைக்கு கொண்டுவந்து சரிபார்ப்பு முடிந்ததும் முடிவுகள்அறிவிக்கப்படுகிறது. இதுதவிர ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும்  ஐந்துவாக்குசாவடிகள் வீதம் குலுக்கல் முறையில் விவிபாட் இயந்திரம் (யாருக்கு வாக்களித்தோம்என்பதை வாக்காளர் அறியும் கருவி)  தேர்வுசெய்து அதில்உள்ள சீட்டுக்கள் எண்ணப்படும். விவிபாட் சீட்டு மற்றும் இயந்திர வாக்கு இரண்டும் ஒப்பிட்டுப்பார்க்கப்படும். இதில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் விவிபாட்வாக்குகளே இறுதியாக எடுத்துக்கொண்டு சேர்க்கப்படும்

எம்பி தொகுதியில் இடம்பெற்றுள்ள வேடசந்தூர் 22சுற்றுக்கள், அரவக்குறிச்சி 18சுற்றுக்கள், கரூர், கிருஷ்ணராயபுரம் 19சுற்றுக்கள், மணப்பாறை 24சுற்றுக்கள், விராலிமலை 19சுற்றுக்களாக எண்ணிக்கை நடைபெறுகிறது. அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 63வேட்பாளர்கள் என்பதால் பெரிய ஹால் ஒதுக்கப்பட்டு அங்குவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கு 14மேசைகள் போடப்பட்டு 18சுற்றுக்களாக வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது.வாக்குஎண்ணிக்கைபார்வையாளர்களான ஹரிபிரதாப்சாஹி, அரவக்குறிச்சி தொகுதி, கரூர், கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், பிரசாந்த்குமார், மணப்பாறை, விராலிமலை வினித் ஆகியோர் கண்காணிப்பில் எண்ணிக்கை நடைபெறுகிறது.  துணை ராணுவப்படையினர் 2கம்பெனி ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்புக்காவல் படைபோலீசார், துணை ராணுவப்படையினர் என மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: