சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்க கோரிக்கை

கரூர், பிப்.14: சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில்  முத்தனூர் தனியார் பள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பங்கள்  பழுதடைந்துள்ளன. சேதமடைந்த தூண்களை மாற்றாமல் இருப்பதால்  கீழே விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழுதான டிரான்ஸ்பார்மர்  கம்பத்தில் இருந்து சிமெண்ட் பூச்சுக்கள் விழுந்துகொண்டிருக்கின்றன.  உடனடியாக கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: